தமிழ் சினிமா

அசோக் செல்வன், மிர்ச்சி சிவா இணையும் 144

செய்திப்பிரிவு

அசோக் செல்வன், 'மிர்ச்சி' சிவா இணையும் திரைப்படத்துக்கு '144' என்று டைட்டில் வைத்துள்ளனர்.

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், அபினேஷ் இளங்கோவனின் அபி& அபி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் '144'.

மணிகண்டன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வனும், 'மிர்ச்சி' சிவாவும் இணைந்து நடிக்கின்றனர். ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தில் முனீஸ்காந்த் கேரக்டரில் நடித்த ராமதாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

'வாயை மூடி பேசவும்', 'சதுரங்க வேட்டை', 'ஆடாம ஜெயிச்சோமடா 'ஆகிய படங்களுக்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இவர் சாண்டில்யன் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கான எடிட்டிங் பணிகளை லியோ ஜான்பால் மேற்கொள்கிறார்.

'144' படத்தின் ஷூட்டிங் மதுரையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

SCROLL FOR NEXT