தமிழ் சினிமா

வசூல் நிலவரம்: ஓகே கண்மணி, காஞ்சனா 2 ஹிட்!

ஐஏஎன்எஸ்

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஓ காதல் கண்மணி', ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வந்த 'காஞ்சனா 2', இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

விமர்சகர்களையும் கவர்ந்த 'ஓ காதல் கண்மணி', முதல் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட ரூ.14 கோடியை வசூலித்துள்ளது.

இது குறித்து பேசிய பாக்ஸ் ஆபிஸ் ஆய்வாளர் த்ரிநாத், "'ஓகே கண்மணி', தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் சர்வதேச அளவில் ரூ.14.73 கோடியை வசூலித்துள்ளது. காஞ்சனா 2 படம் சூப்பர்ஹிட்டாக அறிவிக்கப்பட்டபோதிலும் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களை 'ஓகே கண்மணி' கவர்ந்துள்ளது" என்றார்.

கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கடல்', படுதோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ், தாப்ஸி, நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள 'காஞ்சனா 2', இதுவரை ரூ.17.03 கோடியை வசூலித்துள்ளது.

SCROLL FOR NEXT