தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த நலன் குமரசாமி - விஜய் சேதுபதி கூட்டணி

செய்திப்பிரிவு

'சூதுகவ்வும்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நலன் குமரசாமி மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறார்.

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த படம் 'சூதுகவ்வும்'. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நலன் குமாரசாமி சூர்யாவை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த படத்தை இயக்குவதாக நலன் குமரசாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து இப்புதிய படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

காதலை களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.ஹீரோயினாக மடோனா நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் பெயரிடப்படாத இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லியோ ஜான்பால் படத்தொகுப்பு வேலைகளைக் கவனிக்கிறார்.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT