தமிழ் சினிமா

மீண்டும் இணையும் சூர்யா - ஏ.ஆர்.முருகதாஸ்

ஸ்கிரீனன்

'கஜினி', 'ஏழாம் அறிவு' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா.

லிங்குசாமி இயக்கத்தில் 'அஞ்சான்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஜுன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், வெங்கட்பிரபு படத்தினை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் சூர்யா. இப்படத்தினை தெலுங்கு தயாரிப்பாளர் புஜ்ஜி (BUJJI) தயாரிக்க இருக்கிறார்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் புஜ்ஜி, "தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தினைத் தயாரிக்க இருக்கிறேன். சூர்யா நடிக்க இருக்கிறார்." என்று தெரிவித்து இருக்கிறார்.

தற்போது விஜய்யை வைத்து 'கத்தி' படத்தினை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்தினைத் தொடர்ந்து சூர்யா படத்தின் வேலைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT