தமிழ் சினிமா

உதவி இயக்குநரை கரம் பிடிக்கிறார் நடிகை விஜயலட்சுமி

ஸ்கிரீனன்

நடிகை விஜயலட்சுமி விரைவில் திருமணம் செய்து கொண்டு, சினிமா தயாரிப்பாளர் ஆக திட்டமிட்டு இருக்கிறார்.

'சென்னை 600028' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. 'அஞ்சாதே', 'சரோஜா', 'அதே நேரம் அதே இடம்', 'கற்றது களவு', 'வெண்ணிலா வீடு' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து வந்தார். இருவரது காதலுக்கு அகத்தியன் சம்மதம் தெரிவிக்கவே வரும் செப்டம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இத்தகவலை விஜயலட்சுமியின் தங்கை நிரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு சினிமா தயாரிப்பாளராக திட்டமிட்டு இருக்கிறார் விஜயலட்சுமி. இது குறித்து, "ஒரே நேரத்தில் நடிப்பு மற்றும் தயாரிப்பு என இரண்டு துறைகளில் கவனம் செலுத்துவது கடினம். எனவே நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு தயாரிப்பில் கவனம் செலுத்தவுள்ளார்.

அவரது முதல் தயாரிப்பு ஜூலை மாதம் தொடங்கலாம்" என்று விஜயலட்சுமிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT