உலக கோப்பை இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளதால் மார்ச் 27ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கி ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது 'கொம்பன்'
கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'கொம்பன்'. முத்தையா இயக்கி இருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. மார்ச் 27ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டம் மார்ச் 29ம் தேதி நடைபெற இருக்கிறது. மார்ச் 27ம் தேதி வெளியிட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று நினைத்து, தற்போது வெளியீட்டு தேதியை மாற்றியிருக்கிறார்கள்.
'நண்பேன்டா', 'சகாப்தம்' ஆகிய படங்களோடு 'கொம்பன்' படமும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.