தமிழ் சினிமா

அஜித்தின் விசாரிப்பு: நடிகர் விஷ்ணு நெகிழ்ச்சி

ஸ்கிரீனன்

தனது அறுவை சிகிச்சை பற்றி தெரிந்துக்கொண்டு வந்து விசாரித்த அஜித்தின் அணுகுமுறை குறித்து விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சமீபத்தில் அஜித், ஷாலினி தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்தது. இன்னும் ஷாலினி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பவில்லை.

சி.சி.எல் கிரிக்கெட் போட்டியில் நடிகர் விஷ்ணுவிற்கு கையில் அடிப்பட்டது. இதனால் அவரது இடது கையில் பிளேட் பொருத்தப்பட்டது. தற்போது கை சரியானதால், கையில் இருந்த பிளேட்டே அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஷாலினி அனுமதிக்கப்பட்டு இருந்த அதே தளத்தில் விஷ்ணுவும் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனை கேள்விப்பட்ட அஜித், விஷ்ணுவிடம் உடல்நலம் விசாரித்தார்.

"நான் அதே தளத்தில் சிகிச்சை பெற்று வருகிறேன் எனத் தெரிந்ததும் யார் என்னை ஆச்சரியப்படுத்தியது என்று பாருங்கள்.. எவ்வளவு எளிமையான, இனிமையான மனிதர்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் நடிகர் விஷ்ணு.

SCROLL FOR NEXT