எனது பாடல்களை முறை கேடாக பயன்படுத்துபவர் களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தீர்ப்பு கிடைத்துள்ளது என்று இளையராஜா தெரி வித்தார்.
இசையமைப்பாளர் இளைய ராஜா கடந்த ஆண்டு நீதிமன் றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் இளையராஜாவின் பாடல்களை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளையராஜா வும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவும் நேற்று நிருபர்களைச் சந்தித் தனர். அப்போது இளைய ராஜா கூறியதாவது: தயாரிப் பாளர்களுக்கு பயன் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் எக்கோ நிறுவனத்தை என் வகுப்புத்தோழன் சுப்ரமணி யன் மேற்பார்வையில் தொடங் கினேன். ‘மூன்றாம் பிறை’ படத்திலிருந்து தொடங்கப் பட்டதுதான் எக்கோ நிறுவனம். ஆனால், அந்த நிறுவனம் தொடங்கியது முதல் விற்பனை ஆன தொகையை யாரும் என்னிடம் கொடுத்ததில்லை. அதனால்தான் அதை அப்போது பார்த்தசாரதி என்ற நபரிடம் மாற்றிக்கொடுத்தேன். அதேபோல, உதவி செய்யுங்கள் என்று வந்து நின்ற வேறொரு நிறுவனத்துக்கும் அப்போது விற்பனை உரிமையை கொடுத்தேன்.
அந்த நிறுவனங்கள் இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு ராயல்டி எதுவும் கொடுக் காமல் இருந்து வந்தனர். இதனால் வழக்கு தொடரும்படி ஆனது. முறைகேடாக பயன் படுத்துபவர்களுக்கு எச்சரிக்கையாக தற்போது தீர்ப்பும் கிடைத்துள்ளது. இவ்வாறு இளையராஜா கூறினார்.
கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “ஒரு நிறுவனத் திடம் குறிப்பிட்ட ஆண்டு களுக்கு பாடல்களின் உரிமை யைக் கொடுத்தால் அதை மீறாமல் இருக்க வேண்டும். பாடல்களின் உரிமையை மேலும் தொடர்ந்து பயன் படுத்த வேண்டுமென்றால் அந்தப்படத்தின் தயாரிப் பாளரிடமும், இசையமைப் பாளரிடமும் அனுமதி பெற வேண்டும். அதை மீறும் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.