மார்ச் 27ம் தேதியில் இருந்து பின்வாங்கி தற்போது 'வாலு' படத்தை மே 1ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'வாலு'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். விஜய் சந்தர் இயக்கி இருக்கிறார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு படத்தை வெளியிடும் பணிகளைத் துரிதப்படுத்தினார் தயாரிப்பாளர். இதனால் டப்பிங் பணிகள், பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் என தீவிரமாக நடைபெற்றது.
மார்ச் 27ம் தேதி 'வாலு' வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. படமும் சென்சார் செய்யப்பட்டு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மார்ச் 27ம் தேதி வெளியீட்டில் இருந்து பின்வாங்கி இருக்கிறது 'வாலு'. தற்போது மே 1ம் தேதி படத்தை வெளியிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
மார்ச் 27ம் தேதி 'கொம்பன்', 'வலியவன்' ஆகிய படங்கள் மட்டுமே வெளியாவது உறுதியாகி இருக்கிறது.