'ஜெயம்', 'அந்நியன்', 'உன்னாலே உன்னாலே' ஆகிய படங்களில் நடித்த நடிகை சதா, நீண்ட நாட்களுக்குப் பிறகு, வடிவேலு நாயகனாக நடிக்கும் 'எலி' படத்தின் மூலம் மீண்டும் நடிக்கவருகிறார்.
வடிவேலு நாயகனாக நடித்த 'தெனாலிராமன்' படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன், 'எலி' படத்தையும் இயக்குகிறார். ஒரு எலியின் குணாதிசயங்களைக் கொண்டவராக வடிவேலு இதில் நடிக்கிறார். 70-களில் நடப்பதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
"சதா ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேற்கொண்ட வேறு எதுவும் இப்போதைக்குக் கூற முடியாது. அடுத்த வாரம் முதல் அவர் படப்பிடிப்பில் இணையவுள்ளார்" என இயக்குநர் யுவராஜ் கூறினார்.
படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த இரண்டு மாதங்களில் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து வெளியாகத் தயாராகிவிடும் என்றும் யுவராஜ் கூறியுள்ளார்.