தமிழ் சினிமா

கண்ணன் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் போடா! ஆண்டவனே என் பக்கம்

செய்திப்பிரிவு

கண்ணன் இயக்கத்தில் விஷ்ணு, பிரயாகா நடிக்கும் படத்துக்கு 'போடா! ஆண்டவனே என் பக்கம்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்துக்குப் பிறகு இயக்குநர் கண்ணன் இயக்கும் புதிய படம் 'போடா! ஆண்டவனே என் பக்கம்'. இதில் விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார். 'பிசாசு' படத்தில் நடித்த பிரயாகா ஹீரோயினாக நடிக்கிறார்.

விஜய் ராஜ் ஜோதி தயாரிக்கும் இப்படத்துக்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்குநராகவும், ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் பணிபுரிய உள்ளனர்.

நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கான வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

மே மாதம் இறுதியில் 'போடா! ஆண்டவனே என் பக்கம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி செப்டம்பர் மாதத்தில் திரைப்படத்தை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது.

காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக 'போடா! ஆண்டவனே என் பக்கம்' திரைப்படம் உருவாக உள்ளது.

SCROLL FOR NEXT