மலையளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ'. நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிய இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கிறார்.
நீண்ட நாட்கள் நடிப்புக்கு ஓய்வு தந்திருந்த நடிகை ஜோதிகாவின் ரீ-எண்ட்ரி படமாக இது பார்க்கப்படுகிறது. ட்விட்டரில் புதிதாக இணைந்துள்ள நடிகர் சூர்யா இந்தப் படத்தின் பெயரையும், புதிய போஸ்டரையும் தனது பக்கத்தில் பதிவேற்றினார்.
'36 வயதினிலே' என இத்திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். நடிகர் ரகுமான் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். கோடை விடுமுறையில் இந்தப் படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.