தமிழ் சினிமா

அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ் நடிக்கும் ஒரு நாள் கூத்து

செய்திப்பிரிவு

'அட்டகத்தி' தினேஷ், மியா ஜார்ஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு 'ஒரு நாள் கூத்து' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் படம் 'ஒரு நாள் கூத்து'. 'அட்டகத்தி' தினேஷ் இதில் ஹீரோவாக நடிக்கிறார். 'அமரகாவியம்' படத்தில் நாயகியாக அறிமுகமான மியா ஜார்ஜ் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

சசிதரனின் 'வாராயோ வெண்ணிலாவே' படத்தில் தினேஷ் நடித்து முடித்திருக்கிறார். படம் விரைவில் திரையைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறனின் 'விசாரணை' படம் முடிந்த நிலையில், 'திருடன் போலீஸ்' இயக்குநர் கார்த்திக் ராஜூவின் 'உள்குத்து' திரைப்படத்தில் தினேஷ் நடிக்கிறார்.

'ஒரு நாள்' கூத்து திரைப்படத்தின் மார்ச் படப்பிடிப்பு 30ல் துவங்க உள்ளது. மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT