தமிழ் சினிமா

பர்மா தரணிதரன் இயக்கத்தில் இணையும் சிபிராஜ், சத்யராஜ்

செய்திப்பிரிவு

சிபிராஜ், சத்யராஜ் ஆகிய இருவரும் 'ஜாக்சன் துரை' படத்தில் இணைந்து நடிக்கின்றனர். 'பர்மா' பட இயக்குநர் தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார்.

சத்யராஜ், சிபிராஜ் இணைந்து 'ஜோர்', 'மண்ணின் மைந்தன்', 'வெற்றிவேல் சக்திவேல்', 'கோவை பிரதர்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு 'ஜாக்சன் துரை' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

'பர்மா' படத்தை இயக்கிய தரணிதரன் இப்படத்தை இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். ஸ்ரீ க்ரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

100 வருடமாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமத்தை காப்பாற்ற ஒரு போலீஸ் அதிகாரி அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்களே படத்தின் கதை.

சித்தார்த் விபின் இசையமைக்கும் இப்படத்துக்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT