நடிகர் ராகவேந்திரா லாரன்ஸின் காஞ்சனா 2-ஆம் பாகம், ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் லாரன்ஸ் 4 தோற்றங்களில் நடித்துள்ளார்.
லாரன்ஸ் இயக்கி, நடித்த காஞ்சனா படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து காஞ்சனாவின் இரண்டாம் பாகத்தை லாரன்ஸ் துவக்கினார். படம் தற்போது நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இத்திரைப்படத்தில் லாரன்ஸ், 15 வயது, 25 வயது, 40 வயது மற்றும் 60 வயது என வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அந்தந்த வயதுடைய பேய்கள் லாரன்ஸை ஆக்கிரமிப்பதால் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுகிறது என கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பான காஞ்சனா 2-ஆம் பாகத்தில் டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.