தமிழ் சினிமா

500 திரையரங்குகளில் வெளியாகிறது சகாப்தம்

செய்திப்பிரிவு

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் 'சகாப்தம்' திரைப்படம் ஏப்ரல் 2ல் மொத்தம் 500 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'சகாப்தம்'. நாயகிகளாக 'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற நேகாவும், 'மிஸ் பெங்களூரு' பட்டம் வென்ற சுப்ரா ஐயப்பாவும் அறிமுகம் ஆகிறார்கள்.

அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்கி உள்ள இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

சிங்கம் புலி, ஜெகன், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், தேவயானி, ரஞ்சித் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இந்நிலையில், தற்போது ஏப்ரல் 2ம் தேதி 'சகாப்தம்' வெளியாகும் என்று கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 300 திரையரங்குகளில் 'சகாப்தம்' வெளியாக உள்ளது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் 100 திரையரங்குகளிலும், மும்பை, ஹைதராபாத், கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களில் மொத்தம் 100 திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

ஏப்ரல் 2ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நண்பேன்டா' படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT