தமிழ் சினிமா

தனுஷுடன் நடனம் ஆடிய அனிருத்

செய்திப்பிரிவு

'மாரி' திரைப்படத்துகாக தனுஷும், அனிருத்தும் இணைந்து ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் மூன்றாவது படம் 'மாரி'. தனுஷ் இதில் நாயகனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், காளி வெங்கட், விஜய் யேசுதாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும், மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து 'மாரி' திரைப்படத்தைத் தயாரிக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

'மாரி' படத்தில் டெய்லராக தனுஷ் நடிக்கிறார். நூல் விற்கும் பெண்ணாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சென்னையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முழுக்க முழுக்க சென்னைத் தமிழ் பேசி தனுஷ் நடிக்கிறார். இதில் ஒரு குத்துப்பாடலுக்கு தனுஷும், அனிருத்தும் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.

கொஞ்சம் நல்ல மாரி, கொஞ்சம் வேற மாரி, தேய்ச்சா தங்க மாரி, முறைச்சா சிங்க மாரி என்று இந்தப் பாடல் தொடங்குகிறது. இப்பாடல் காட்சியை சமீபத்தில் தூத்துக்குடியில் எடுத்து முடித்துள்ளனர்.

தனுஷும், அனிருத்தும் இணைந்து ஆடியதை இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT