'பிறவி' படத்தின் ப்ரமோ பாடலுக்காக விக்ராந்துடன் இணைந்து ஆர்யா, விஷால், விஷ்ணு ஆகிய மூவரும் நடனம் ஆடுகின்றனர்.
விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் 'பிறவி' படத்தை இயக்குகிறார். அபிநயா, பார்வதி நிருபன், லீமா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அருள்தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வுதான் கதை. அதை குறிக்கும் விதத்தில்தான் 'பிறவி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.
த்ரில்லர், ஆக்ஷன், காதல், ரொமான்ஸ் என அனைத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ் இசையமைக்கிறார்
இதில் ‘தேடி தேடி பார்த்தோமே’ என்ற பாடலை ரஞ்சித்துடன் இணைந்து விக்ராந்த் பாடியுள்ளார் .
'பிறவி' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் புரமோ பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். தக தக எனத் தொடங்கும் அப்பாடலுக்கு விக்ராந்துடன் இணைந்து ஆர்யா, விஷால்,விஷ்ணு ஆகிய மூன்று ஹீரோக்களும் நடனம் ஆடுகிறார்கள்.
இதை விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.