நடிகர் அருள்நிதிக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெறுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனான அருள்நிதி, தமிழ்த் திரையுலகில் 'வம்சம்', 'மெளனகுரு' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர்.
இவருக்கும், ஒய்வு பெற்ற நீதிபதி கண்ணதாசனின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. என்ன தேதி என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. அருள்நிதி நடிப்பில் தயாராகி இருக்கும் 'நாலு போலீஸும் நல்லாயிருந்த ஊரும்' மற்றும் 'டிமாண்ட்டி காலனி' ஆகிய படங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியாக இருக்கிறது.