தமிழ் சினிமா

அஜித் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

செய்திப்பிரிவு

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

'வீரம்' படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைகிறார் சிவா. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

ஏ.எம்.ரத்னம் இப்படத்தைத் தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதை அனிருத் வீடியோ வடிவில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

''தல56 படத்துக்கு இசையமைக்கிறேன். 2015 எனக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமையும்'' என்று அனிருத் கூறியுள்ளார்.

மே 1 அன்று இப்படத்தின் பூஜை விருகம்பாக்கம் சாய்பாபா கோவிலில் நடைபெற உள்ளது.

அனிருத் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ இணைப்பு கீழே:

SCROLL FOR NEXT