'அரிமா நம்பி' பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அனிருத்
2014ம் ஆண்டில் 'வேலையில்லா பட்டதாரி', 'மான் கராத்தே', 'கத்தி' ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருந்தார் அனிருத். 'காக்கி சட்டை' படத்தோடு தனது 2015ம் கணக்கைத் தொடங்கியிருக்கிறார்.
ராம்சரண் படம் மூலமாக தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாக திட்டமிட்டு இருந்தார் அனிருத். ஆனால், தமிழில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்ததால், ராம்சரண் படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது அப்படத்துக்கு தமன் இசையமைக்க இருக்கிறார்.
அஜித் - சிவா படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கும் அனிருத், அப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் - ஆனந்த் ஷங்கர் இணையும் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார். விக்ரமுடன் காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் நடிக்கவிருக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.