தமிழ் சினிமா

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் பாயும் புலி

செய்திப்பிரிவு

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு 'பாயும் புலி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பாண்டிய நாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு சுசீந்திரனும், விஷாலும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு 'பாயும் புலி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சமுத்திரக்கனி விஷாலுக்கு மூத்த சகோதரராக நடிக்கிறார்.

பெங்களூருவைச் சார்ந்த புதுமுகம் வில்லனாக நடிக்கிறார். சூரி, ஆனந்த் ராஜ் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வேந்தர் மூவிஸ் மதன் இப்படத்தைத் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

SCROLL FOR NEXT