சிம்புவுடன் ஏற்பட்ட காதல் முறிவு குறித்த கேள்விகளையே தொடர்ச்சியாக கேட்பதால், பத்திரிகையாளர்களைச் சந்திக்க மறுத்து வருகிறார் நடிகை ஹன்சிகா.
'வாலு', 'வேட்டை மன்னன்' உள்ளிட்ட படங்களில் நடித்தபோது நடிகர் சிம்பு - ஹன்சிகா இடையே நட்பு மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்தார்கள். இருவருக்கும் இடையேயான காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
இதனால் சிம்பு - ஹன்சிகா இருவருமே பிரிந்தார்கள். ஹன்சிகாவுடனான பிரிவு ஏன் என்பதற்கு சிம்பு அறிக்கை மூலமாக விளக்கம் அளித்தார். ஆனால், ஹன்சிகா தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், பத்திரிக்கையாளர்கள் பேட்டி என்றவுடன் சிம்பு கேள்விகளை கேட்டு வந்தார்கள். அதற்கு "நோ கமெண்ட்ஸ்" என்று பதில் சொல்லி வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் ஹன்சிகா என்ற வதந்தியுடன் சில அந்தரங்க வீடியோக்கள் வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. இதனால், பேட்டி என்றாலே 'கொஞ்ச நாளைக்கு வேண்டாம்' என்று கூறி வருகிறார்.
இன்னும் சிம்பு கேள்வி தன்னை துரத்தி வருவதோடு வாட்ஸ்-அப் கேள்வியும் இணைந்துள்ளதால் பேட்டியே சில மாதங்களுக்கு வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறாராம்.
வாட்ஸ்-அப் வீடியோ குறித்து, "அந்தப் படத்தில் இருப்பது நான் அல்ல என்று எல்லோருக்கும் தெரியும். பின்னர் ஏன் புகார் செய்ய வேண்டும்?" என்று ஹன்சிகா தெரிவித்து இருக்கிறார்.
மேலும், சமீபத்தில் நடைபெற்ற 'ரோமியோ ஜுலியட்' பத்திரிகையாளர் சந்திப்பிற்கு கூட ஹன்சிகா வராததிற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.