தமிழ் சினிமா

தனுஷ் - வேல்ராஜ் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது

செய்திப்பிரிவு

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை தொடங்கியது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தில் நடித்து வந்தார் தனுஷ். காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்துக்காக தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுமையாக முடிந்தது.

'மாரி' படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து, வேல்ராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் தனுஷ்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது. தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றிக் கூட்டணி என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 'வேலையில்லா பட்டதாரி' இரண்டாம் பாகத்தைத் தான் படக்குழு படமாக்க திட்டமிட்டு இருக்கிறார் என்று வெளியான தகவலை படக்குழு மறுத்திருக்கிறது.

SCROLL FOR NEXT