தமிழ் சினிமா

டண்டனக்கா டி.ராஜேந்தருக்கு மரியாதையே: ரோமியோ ஜூலியட் இயக்குநர்

செய்திப்பிரிவு

ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரோமியோ ஜூலியட்'. இந்தப் படத்தில், இமான் இசையில், அனிருத் பாடியிருக்கும் 'டண்டனக்கா' என்ற பாடல் மட்டும், சமீபத்தில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டது.

இந்தப் பாடலில் டி. ராஜேந்தரின் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் பாடல் வைரல் ஹிட்டாக, இந்தப் பாடலை வைத்து டி.ராஜேந்தரை கலாய்த்து சில நெட்டிசன்கள் வீடியோக்களை பதிவேற்றியுள்ளனர்.

இது ரோமியோ ஜூலியட் இயக்குநர் லஷ்மண் கவனத்துக்கு வர, அவர் ட்விட்டரில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"தயவு செய்து டண்டனக்கா பாடலை வைத்து, டி.ஆர் அவர்களை கலாய்த்து வீடியோக்களை பதிவேற்றாதீர்கள் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அந்தப் பாடல் அவர் மீது எனக்கிருக்கும் அன்பினால், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. டி.ஆர் அவர்கள் இதனால் காயமடையக்கூடாது. பாடலை ரசியுங்கள். மற்றவர்களை புண்படுத்தாதீர்கள்" என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT