தமிழ் சினிமா

தேசிய விருது ஆகச் சிறந்த ஊக்குவிப்பு: குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா

ஸ்கிரீனன்

சிறந்த படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இந்த தேசிய விருது ஆகச்சிறந்த ஊக்குவிப்பாக இருக்கிறது என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் இயக்குநர் பிரம்மா. இவர் இயக்கிய 'குற்றம் கடிதல்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது.

62-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.

இதில், பள்ளிக் கல்வித் துறையின் சீர்திருத்தம், ஆசிரியர் - மாணாக்கர் உறவு, தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் பல்வேறு விவாதங்களைத் தூண்டக் கூடிய படமாக 'குற்றம் கடிதல்' உள்ளதால் தேசிய விருதுக்கு தேர்வானது.

விருது பெற்ற இயக்குநர் பிரம்மாவிடம் வாழ்த்துகள் தெரிவித்தோம்.

''இந்த விருதுக்கு இனிமேல் தான் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் சிறந்த படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்கு இந்த விருது எனக்கு ஊக்குவிப்பாக இருக்கிறது.

இந்த தேசிய விருதை என்னுடைய படக்குழு மற்றும் முதல் வாய்ப்புக்காக காத்திருக்கும் எல்லா இயக்குநர்களுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்'' என்கிறார் பிரம்மா.

SCROLL FOR NEXT