தமிழ் சினிமா

சைனஸ் பிரச்சினை: நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை

செய்திப்பிரிவு

சைனஸ் பிரச்சினையால் அவதிப்பட்டுவந்த நடிகர் அஜித்குமாருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சிகிச்சை முடிந்து அவர் தேறிவருகிறார்.

'என்னை அறிந்தால்’ வெற்றியைத் தொடர்ந்து 'வீரம்' சிவா இயக்கத்தில் புதிய படம் துவங்கவுள்ள நிலையில், தனது உடல்நலத்துக்காக சிறிது நேரத்தை அஜித் ஒதுக்கியுள்ளார். அவருக்கு சைனஸ் தொல்லையால் அவ்வப்போது மூக்கடைப்பும், பேசுவதில் சிக்கலும் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து septoplasty எனப்படுகிற அறுவை சிகிசை அவருக்கு மூக்குத் தண்டில் செய்யப்பட்டுள்ளது.

பிரபல காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் டாக்டர். எம்.கே ராஜசேகர் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், அஜித் வேகமாக தேறி வருவதாகவும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 'ஆரம்பம்' படத்தின் படப்பிடிப்பில் முதுகுத் தண்டில் அடிபட்டாலும், படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதனால், அது முடிந்த பின்னரே அஜித் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். அதற்கு முன்பும், ரேஸ் விபத்தில் பட்ட காயம் காரணமாக அஜித் முதுகுத் தண்டில் அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT