தமிழ் சினிமா

பாஹுபாலி படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினி வரவில்லை: ராஜமெளலி

ஸ்கிரீனன்

'பாஹுபாலி' படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினி வரவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

'கோச்சடையான்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'விக்ரமசிம்ஹா' டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. மோகன்பாபு, இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜமெளலியிடம் ரஜினிகாந்த், "'பாஹுபாலி' படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நீங்கள் இயக்குவதை பார்க்க வேண்டும்" என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து 'பாஹுபாலி' படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினிகாந்த் சென்றதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் தளத்தில், " எங்களது படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினி சார் வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் உண்மையில்லை. இன்னும் எங்களுக்கு அந்த பெருமிதம் கிடைக்கவில்லை. ஒரு நாள் கிடைக்கலாம்.." என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT