தமிழ் சினிமா

விஜய்க்கு மீண்டும் நாயகியாகிறார் சமந்தா

செய்திப்பிரிவு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் மூலம் மீண்டும் விஜய்க்கு நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் கொடுத்திருக்கிறார் விஜய்.

இப்படத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தயாரிக்க இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. சமந்தா இப்படத்தின் நாயகியாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. தற்போது மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இப்படத்தில் விஜய், சமந்தா, 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 'புலி' முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாக தொடங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT