தமிழ் சினிமா

காமராஜ் படத்தில் நடிக்கும் இயக்குநர் மகேந்திரன்

செய்திப்பிரிவு

'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'கை கொடுக்கும் கை' உள்ளிட்ட பல யதார்த்த படங்களை படைத்தவர் இயக்குநர் மகேந்திரன். தற்போது 'காமராஜ்’ படத்தில் அமைச்சர் கதாபாத்திரத்தில் இயக்குநர் மகேந்திரன் நடித்துள்ளார்.

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு வெளிவந்த படம் 'காமராஜ்'. 11 ஆண்டுகளுக்கு முன்பே இத்திரைப்படம் வெளியானது. இப்படம் தற்போது பல மாறுதல்கள் செய்யப்பட்டு மறுதணிக்கை செய்யப்படுகிறது.

இதுகுறித்து இயக்குநர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ''இன்றைய இளைஞர்களுக்கு காமராஜரை கொண்டுசெல்லும் விதமாக பல புதிய விஷயங்கள் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மகேந்திரன் அமைச்சராக நடித்துள்ளார். காமராஜ் படத்தில் நடித்ததோடு, காமராஜ் பயன்படுத்திய துண்டு ஒன்றை அவர் நினைவாக வாங்கிச் சென்று பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

30 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு, 20 காட்சிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மறுதணிக்கை செய்து ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்'' என்கிறார் இயக்குநர் பாலகிருஷ்ணன்.

SCROLL FOR NEXT