'அனேகன்' படத்திற்கு முதலில் நாயகியாக நடிக்க ஆலியா பட்-ஐ அணுகியதாகவும், தேதிகள் ஒத்துவரவில்லை என்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கி இருக்கும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. காதலர் தின சிறப்பாக ஏப்ரல் 13ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. 'அனேகன்' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அனைத்து திரையரங்கிலும் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிக்க பல்வேறு நாயகிகளை அணுகி இருக்கிறார் கே.வி.ஆனந்த். படத்தில் பள்ளி மாணவி, ஐ.டி துறையில் பணியாற்றும் ஊழியர் என பல்வேறு வேடங்களில் நடித்திருக்கிறார் அமைரா.
இவ்வாறு அனைத்து வேடங்களில் சரியாக இருக்கும் நபரை வெகு நாட்களாக தேடியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இறுதியாக, இந்தியில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஆலியா பட்-ஐயும் அணுகி இருக்கிறார். அவருடைய தேதிகள் சரிவரவில்லை என்பதால் இறுதியாக அமைரா-ஐ ஒப்பந்தம் செய்திக்கிறார்.
அப்படத்தில் கன்னத்தை ஒட்டி முத்தம் கொடுப்பது போல நிறைய இடங்களில் வருகிறாதாம். இது இயல்பிலேயே அமைராவின் பழக்கம், அதை படத்திற்கு நான் உபயோகப்படுத்திக் கொண்டேன் என்று கே.வி.ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.