தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அனேகன் திரைப்படத்தின் 'டங்கா மாரி' பாடல் படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வைரல் ஹிட்டாக உலா வந்தது.
தற்போது படம் வெளியான பிறகும் அந்தப் பாடலுக்கான மவுசு குறையாமல் பலரும் அந்தப் பாடலைப் பாடி, நடனமாடி இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
இந்த வரிசையில் நடிகர் தனுஷின் கோவை ரசிகர்கள், அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், தாங்களாகவே ஒரு 'டங்கா மாரி' பாடல் வீடியோ எடுத்து பதிவேற்றியுள்ளனர். விளையாட்டாக எடுத்த வீடியோக்களைப் போல இல்லாமல் தொழில்முறை கலைஞர்களுக்கு நிகராக இந்த வீடியோ நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.
இதைப் பார்த்த நடிகர் தனுஷ், சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்கள் முயற்சிக்கும் பாராட்டுகளையும் கூறி வீடியோ இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இக்காட்சிகளை வினோத் இயக்க, கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நடனங்களை முரளி மற்றும் அருண் இருவரும் இணைந்து அமைத்திருக்கிறார்கள்.
</p>