தமிழ் சினிமா

மாநில மொழி படங்களில் என்னை அறிந்தால் அதிக வசூல்: பிவிஆர் சினிமாஸ்

ஸ்கிரீனன்

தங்களைப் பொறுத்தவரை, நடப்பு ஆண்டில் இதுவரை மாநில மொழி படங்களில் 'என்னை அறிந்தால்' படத்தின் வசூல் அதிகம் என்று பி.வி.ஆர். சினிமாஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் பல்வேறு நகரங்களில் திரையரங்குகளை நிர்வாகித்து வருகிறது பி.வி.ஆர் நிறுவனம். அனைத்து முக்கியமான மாநிலங்களிலும் திரையரங்குகள் இருப்பதால் அனைத்து மொழி திரைப்படங்களின் வசூலையும் இவர்கள் கண்காணிப்பது வழக்கம்.

திரையரங்குகள் நிர்வாகிப்பது மட்டுமன்றி படங்கள் விநியோகம் மற்றும் தயாரிப்பு உள்ளிட்டவையும் நடத்தி வருகிறது பி.வி.ஆர் நிறுவனம்.

இந்த அண்டு தொடக்கத்தில் இருந்து தங்களது திரையரங்க நிர்வாகத்தில் எந்த படங்கள் நல்ல வசூல் ஈட்டி கொடுத்தன என்று கமல் கியான்சந்தானி தெரிவித்துள்ளார். இவர் பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவராவார்.

"இந்த வருடம் வெளியான எந்த இந்திப் படங்களும் மிகப்பெரிய வெற்றி பெறாத நிலையிலும் எங்கள் திரையரங்குகள் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. திரைப்பட வியாபாரம் ஒரு சுழற்சி போல. சென்ற காலாண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. பிகே படத்திற்கு நன்றி, தொடர்ந்து பல வாரங்கள் பெரிதாக வீழ்ச்சியின்றி ஓடியது.

எங்கள் திரையரங்குகள் முக்கிய நகரங்களிலேயே உள்ளன. நகரவாசிகள் பேபி போன்ற திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பை தருகின்றனர். அது நல்ல வசூலை பெற்றது. இதோடு, சில ஹாலிவுட் படங்களும், குறிப்பாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களும் திரையிடப்பட்டு அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

சில மாநில மொழி திரைப்படங்களும் நல்ல வசூலைப் பெற்றுள்ளன. அஜித் நடித்த தமிழ் படமான 'என்னை அறிந்தால்', மேலும் சில வங்காள மொழிப் படங்களும் நன்றாக ஓடிவருவதால் எங்கள் வியாபாரம் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை" என்று கமல் கியான்சந்தானி தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT