தமிழ் சினிமா

மணிரத்னம் படத்தின் தலைப்பு: முடிவுக்கு வந்த சர்ச்சை

ஸ்கிரீனன்

மணிரத்னம் இயக்கி வரும் படத்தின் தலைப்பு 'ஒகே கண்மணி' என்பது உறுதியாகி இருக்கிறது.

துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் தலைப்பு 'ஒகே கண்மணி' என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தின் தலைப்பில் ஒ.கே என்ற ஆங்கில வார்த்தை இருப்பதால் வரிச் சலுகை கிடைக்காது என்ற காரணத்தால் 'ஓ காதல் கண்மணி' என்று மாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளப் பக்கங்கள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அதில் மணிரத்னம் இயக்கி வரும் படத்தின் தலைப்பு வடிவமைப்பு வெளியாகி இருக்கிறது. அதில் 'ஓ.கே கண்மணி' என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது.

இதனால், மணிரத்னம் படத்தின் தலைப்பு குறித்து வெளியாகி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

SCROLL FOR NEXT