தனது திருமண நாளை முன்னிட்டு, வீட்டின் முன் குழுமியிருந்த ரசிகர்களை சந்தித்து வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார் ரஜினிகாந்த்.
1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி ரஜினிகாந்த்துக்கும் லதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இன்று அவர்களுக்கு 35வது திருமண நாளாகும்.
இதனால் இன்று காலை முதல் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு முன்பு ரசிகர்கள் கூடினார்கள்.
திடீரென்று வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.
லதா ரஜினிகாந்த் வாழ்த்த வந்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.