தமிழ் சினிமா

பெங்களூர் டேஸ் ரீமேக்கில் ஆர்யா, ராணா உறுதி; சிம்ஹா, ஸ்ரீதிவ்யாவிடம் பேச்சு

செய்திப்பிரிவு

'பெங்களூர் டேஸ்' ரீமேக் படத்தில் ஆர்யா, ராணா, சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகிய நால்வரும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 'பெங்களூர் டேஸ்' திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

பஹத் பாசில், நஸ்ரியா நஸீம், துல்கர் சல்மான், நிவின் பவுலி, பார்வதி, இஷா தல்வார், நித்யா மேனன் என மலையாள திரையுலகைக் கலக்கும் இளமைப் பட்டாளம் அனைவரும் 'பெங்களூர் டேஸ்' படத்தில் நடித்தனர்.அஞ்சலி மேனன் இயக்கிய இப்படம் தனி கவனம் பெற்றது.

தற்போது 'பெங்களூர் டேஸ்' தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரீமேக் ஆகிறது. 'பொம்மரில்லு' பாஸ்கர் இப்படத்தை இயக்குகிறார்.

சித்தார்த்தும், சமந்தாவும் இப்படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், நாங்கள் நடிக்கவில்லை என இருவருமே அறிவித்துவிட்டனர். இந்நிலையில், ராணா, ஆர்யா, சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

பஹத் பாசில் கேரக்டரில் ராணாவும், துல்கர் சல்மான் கேரக்டரில் ஆர்யாவும் நடிக்கின்றனர். நிவின் பவுலி கேரக்டரில் சிம்ஹாவையும், நஸ்ரியா கேரக்டரில் ஸ்ரீதிவ்யாவைவும் நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்க உள்ளார். மார்ச் 20-ல் ஷூட்டிங் தொடங்குகிறது.

SCROLL FOR NEXT