நடிகை த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இருவரும் சேர்ந்து சென்னை ஐபிஎல் கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், வருண்மணியன் தேனாம்பேட்டை காவல் நிலையில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், “ஐபிஎல் கிரிக்கெட் அணியை நாங்கள் விலைக்கு வாங்கப் போவதாக செய்தி வெளியானதையடுத்து எங்களுக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. எங்களுக்கு அப்படியொரு எண்ணம் எதுவும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், அதற்கான ரசீதைக் கொடுத்துள்ளனர்.