தமிழ் சினிமா

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ்

மகராசன் மோகன்

‘கயல்’ படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் அர்ஜூன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ராகுல் கூறும்போது, “இப்படத்துக்கான முதல்கட்டப் பணிகள் மார்ச் மாதம் தொடங்கும். பொதுவாக பிரபு சாலமன் லொக்கேஷன்களுக்கு அதிக கவனம் செலுத்துவார். இந்தப் படத்துக்கும் அப்படித்தான். அதிக பொருட்செலவில் உரு வாக்க திட்டமிட்டிருக்கும் இந்தப்படம் சத்ய ஜோதி பிலிம்ஸின் 30-வது படம்’’ என்றார்.

இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடித்துவரும் ‘மாரி’ படத்தை முடித்துவிட்டு புதிதாக ஒரு இந்திப் படத்தில் நடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் பணிகள் முடிந்ததும், பிரபுசாலமனுடன் இணையும் படத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT