1980 நடிகர் - நடிகைகள் சந்திப்பு போலவே, 1990-ல் அறிமுகமான நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் சந்தித்திருக்கிறார்கள். இதற்கான ஏற்பாட்டை கே.எஸ்.ரவிகுமார் செய்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக 1980-களில் அறிமுகமான நடிகர், நடிகைகள் வருடந்தோறும் சந்தித்து வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை வருடந்தோறும் வெவ்வேறு கலைஞர்கள் ஏற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள்.
1980-களின் நடிகர், நடிகைகளின் சந்திப்பு போலவே, 1990-களில் நடிக்கத் துவங்கிய நடிகர், நடிகைகள் ஒரு குழுவாக சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
இச்சந்திப்புக்கான ஏற்பாட்டை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் செய்திருந்தார். இதில் விஜய், சூர்யா, பார்த்திபன், ஜெயராம், சுந்தர் சி, இயக்குநர் ஷங்கர், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அரவிந்த்சாமி, ஜோதிகா, சிம்ரன், மகேஸ்வரி, ரோஜா, மீனா, சங்கவி, சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் பங்கேற்றிருக்கிறார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படப்பிடிப்புக்கு இடையே சூர்யா, வெங்கட்பிரபு இருவருமே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள். எந்தொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித், இச்சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்துமே, தற்போது சமூக வலைத்தளத்தின் ஹாட் டாப்பிக்காக இருப்பது குறிப்பிடத்தக்கது.