'பீட்சா', 'ஜிகர்தண்டா' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக 'இறைவி' படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
'இறைவி' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, சிம்ஹா ஆகிய மூவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கருணாகரன் துணை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'ஜிகர்தண்டா' ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யூ ஆரி 'இறைவி' படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விஷ்ணு கோவிந்த், ஸ்ரீ ஷங்கர் ஆகிய இருவரும் ஒலிப்பதிவாளார்களாக பணியாற்ற உள்ளனர்.
விஜய் முருகன் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு வேலையை கவனித்துக் கொள்கிறார்.
கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.