தமிழ் சினிமா

பீகே ரீமேக்கில் கமல்ஹாசன்?

ஐஏஎன்எஸ்

இந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற பீகே திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவான பீகே படத்தில் ஆமிர் கான் நாயகனாக நடித்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றதோடு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பையும் சம்பாதித்தது.

630 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இப்படம், அகில இந்திய அளவில் அதிகபட்ச வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.

ராஜ்குமார் ஹிரானியின் முந்தைய படங்களான முன்னாபாய் எம்பிபிஎஸ் (தமிழில் வசூல் ராஜா) மற்றும் 3 இடியட்ஸ் (தமிழில் நண்பன்) ஆகிய படங்களின் உரிமையை வாங்கியிருந்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட், பீகே படத்தின் தமிழ் ரீமேக் உரிமையையும் வாங்கியுள்ளது.

இதில் நடிப்பது குறித்து கமல் இன்னும் முடிவெடுக்கவில்லை. அவரே இதை இயக்குவதற்கும் வாய்ப்பிருப்பதாக தயாரிப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசனின் உத்தம வில்லன் மற்றும் பாபநாசம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT