'இரண்டாம் உலகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆர்யா, அனுஷ்கா இணையும் படத்திற்கு 'சைஸ் ஜீரோ' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் முதல்முறையாக ஆர்யா மற்றும் அனுஷ்கா இணைந்து நடித்த திரைப்படம் 'இரண்டாம் உலகம்'. இப்படம் மோசமான தோல்வியைத் தழுவியது. இப்படத்திற்கு பிறகு ஆர்யா, அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
தற்போது ஆர்யா, அனுஷ்கா மீண்டும் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தில் பரத், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். ஸ்ருதிஹாசன் கெளரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். 'சைஸ் ஜீரோ' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்தை பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பிரகாஷ் கோவல்முடி இயக்கவிருக்கும் இப்படத்திற்கு கனிகா கதை, திரைக்கதை எழுதி இருக்கிறார். கீரவாணி இசையமைக்க இருக்கிறார்.
மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.