தமிழ் சினிமா

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னை அறிந்தால் பிடிக்காது: சிம்பு ட்வீட்

செய்திப்பிரிவு

அஜித் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், 'என்னை அறிந்தால்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படம் குறித்த கருத்துக்கள் வழக்கம் போல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நடிகர் சிம்பு அஜித் ரசிகர் என்று அனைவருக்கும் தெரிந்ததே. படம் பார்த்த அவர், "ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ் படம் பார்த்துள்ளேன். தல அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்" என ட்வீட் செய்துள்ளார்.

இதை 830 பேர் இதுவரை ரீட்வீட் செய்துள்ளனர். நீண்ட நாட்களாக எந்த சர்ச்சையிலும் சிக்காத சிம்பு, இந்த ட்வீட்டினால் மீண்டும் ஒரு பரபரப்பை துவக்கியுள்ளார். பிடிக்கவில்லை என்றால் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம் என, தற்போது இந்த ட்வீட்டிற்கு பலர் பதிலளித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT