மீண்டும் சூர்யா - ஹரி இருவரும் இணைந்து 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகத்தினை படமாக்க இருக்கிறார்கள்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கும் '24' படத்தில் நடிக்கவிருக்கிறார். விக்ரம் குமார் படத்தை சூர்யாவே தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
'24' படத்தில் நடித்துக் கொண்டே பாண்டிராஜ் இயக்கும் 'ஹைக்கூ' படத்திலும் சிறிய வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இப்படங்களைத் தொடர்ந்து ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படம் 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமாக இருக்குமா என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று சூர்யா - ஹரி இணையும் படம் 'சிங்கம் 3' என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் 'சிங்கம் 3' படத்திற்கு இசையமைக்கவில்லை. அவருக்கு பதிலாக அனிருத் இசையமைப்பார் என்று அறிவித்திருக்கிறார்கள்.