'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்பட இயக்குநர் மணிகண்டன் இயக்கும் அடுத்த படத்தில் மலையாள நடிகர் திலீப் ஹீரோவாக நடிக்கிறார்.
மலையாளத்தில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர் திலீப். தமிழில் 'ராஜ்ஜியம்' படத்தில் விஜயகாந்துடன் நடித்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்பட இயக்குநர் மணிகண்டன் இப்படத்தை இயக்குகிறார். முழுக்க முழுக்க காமெடி எண்டர்டெயினராக உருவாக உள்ள இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
தமிழில் மட்டுமே உருவாகும் இத்திரைப்படத்துக்கு கதாநாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஜீத்து ஜோசப் இயக்கிய 'லைஃப் ஆஃப் ஜொசுட்டி' படத்தில் நடித்து முடித்த திலீப், தற்போது சித்தார்த் பரதன் இயக்கத்தில் 'சந்த்ரேட்டன் எவிடய்யா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் நடிக்க இருக்கிறார்.