திருமணம் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை என்று நடிகை நமீதா விளக்கம் அளித்துள்ளார்.
எப்போது படவாய்ப்பு இல்லாமல் போகிறதோ, அப்போது திருமணம் செய்துகொள்வேன் என்று நமீதா பேட்டியளித்து இருந்தார். இதனால், அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என்று செய்திகள் பரவின.
இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்து நடிகை நமீதா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நான் திருமணம் செய்துகொள்ளப் போவதைப் பற்றி யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. தானாக பரவி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல.
திருமணம் என்ற பேச்சுக்கே எனது எண்ணத்தில் இடமில்லை. மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்ளவே எண்ணம். அதற்கான நேரத்துக்காக காத்திருக்கேன்" என்று நடிகை நமீதா விளக்கம் அளித்துள்ளார்.