தமிழ் சினிமா

பெங்களூர் டேஸ் ரீமேக்கில் நடிக்கவில்லை: சமந்தா

ஐஏஎன்எஸ்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தயாராகி வரும் பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

விரைவில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகி சமந்தா தான் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு சமந்தா மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கும் பதிலளித்தார். அப்போது, 'பெங்களூர் டேஸ்' குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "'பெங்களூர் டேஸ்' ரீமேக்கில் நடிக்கவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

2015ம் ஆண்டில் தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 3 படங்களும் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

சித்தார்த்துடனான காதல் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, "அது முடிந்து விட்டது. எப்போதோ முடிந்து விட்டது. தற்போது உடனடியாக கூற ஒன்றுமில்லை" என்றார்.

தற்போது தமிழில் விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ள' படத்திலும், அல்லு அர்ஜுனுடன் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.

SCROLL FOR NEXT