தமிழ் சினிமா

த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம்: சென்னையில் நேற்று நடந்தது

செய்திப்பிரிவு

நடிகை த்ரிஷா, வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் சென்னை யில் நேற்று நடந்தது. நடிகர்கள் கமல், சரத்குமார், பிரபு உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. ‘மவுனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், ‘சாமி’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மங்காத்தா’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அஜீத்துடன் அவர் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் த்ரிஷாவுக்கும், திரைப்படத் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் நேற்று திருமண நிச்சய தார்த்தம் நடைபெற்றது. ஆழ்வார் பேட்டையில் உள்ள வருண் மணியன் வீட்டில் பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்தம் நடை பெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ‘ஜெயம்’ ரவி, சித் தார்த், இயக்குநர்கள் மணி ரத்னம், ஏ.எல்.விஜய், நடிகைகள் ராதிகா, அமலா பால், சுகாசினி, ரம்யா கிருஷ்ணன் உட்பட ஏராள மான திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT