தமிழ் சினிமா

என்னை அறிந்தால் ரிலீஸ் ஜன.29-க்கு தள்ளிவைப்பு

ஸ்கிரீனன்

அஜித் நடிப்பில் தயாராகி இருக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என்று நம்மிடம் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்தார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'என்னை அறிந்தால்'. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு வெளியாகாமல் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது "'என்னை அறிந்தால்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதிகட்டப் பணிகள் கொஞ்சம் பாக்கி இருக்கிறது.

காட்சிகள் மற்றும் பாடல்கள் என அனைத்துமே முடிந்துவிட்டன. இதனால் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி ஜனவரி 29-ம் தேதி வெளியாகும்" என்று தெரிவித்தார்.

இதனால், பொங்கல் வெளியீடாக 'ஐ' மற்றும் 'ஆம்பள' ஆகிய படங்கள் மட்டுமே தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 'காக்கி சட்டை', 'கொம்பன்' ஆகிய படங்களும் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT