அண்மையில் ஷங்கர் வெளியிட்ட 'கப்பல்' திரைப்படத்தில், இளையராஜா இசையமைப்பில் கரகாட்டகாரன் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த 'ஊரு விட்டு ஊரு வந்து' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாடலை ரீமிக்ஸ் செய்ய தன்னிடம் இருந்து முறையாக காப்புரிமை பெறவில்லை எனக் கூறி இளையராஜா ஷங்கருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளர்.
இளையராஜா சார்பில், வழக்கறிஞர் எஸ்.கே.ரகுநாதன் வக்கீல் நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில், " தயாரிப்பாளர் ஷங்கர் வெளியிட்ட ’கப்பல்’ 'ஊரு விட்டு ஊரு வந்து' பாடலை பயன்படுத்து அகி மியூசிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக தெரிகிறது. எனது கட்சிக்காரருக்கும் அகி மியூசிக் நிறுவனத்துக்கும் எந்த உடன்பாடும் இல்லை. எனவே, அகி மியூசிக்கிடம் அனுமதி பெற்றது செல்லாது. பாடலை பயன்படுத்தியதற்கான ராயல்டியை இளையராஜாவுக்கு வழங்காவிட்டால் மேற்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.